படப்பிடிப்புக்காக லடாக் செல்லும் லூசிபர் 2 படக்குழு

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘லூசிபர்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகவுள்ளது.

Update: 2023-06-13 16:42 GMT

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், லடாக், நொய்டா, துருக்கி, ஈராக், ஆஃப்கானிஸ்தான், துபாய் மற்றும் ரஸ்யாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்