மிஸ்டேக்கோட சேர்ந்ததுதான் வாழ்க்கை.. வைரலாகும் மார்கழி திங்கள் டிரைலர்
மனோஜ் பாரதிராஜா இயக்கி வரும் திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார்.
நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'மிஸ்டேக்கோட சேர்ந்தது தான் லைஃப்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.