இணையத்தை கலக்கும் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

Update: 2023-05-19 17:53 GMT

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடிப்பதாக நேற்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகக்ளை குவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்