வெளிநாடுகளிலும் கலக்கும் தசரா.. வைரலாகும் போஸ்டர்
நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதன்படி, 'தசரா' திரைப்படம் வெளிநாடு பாக்ஸ் ஆபிசில் இரண்டு மில்லியன்களையும் இந்தியாவில் ரூ.110 கோடியையும் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.