ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர்
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். இவர் மதுரையில் நடந்த ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்.
சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதன்பின்னர் ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரின் பாரட்டுக்களையும் பெற்றார்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம், திருமங்கலம், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இதில் இயக்குனர் அமீர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.