டேனியின் நடிப்பு பயிற்சி பட்டறை... பிரபலங்கள் வாழ்த்து

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் டேனி. இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.

Update: 2023-05-02 17:58 GMT

தமிழ் திரையுலகில் பொல்லாதவன், பையா, ரௌத்திரம் படத்தில் நடித்த டேனி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பின்னர் மியாவ், மரகத நாணயம், ரங்கூன், இரண்டாம் குத்து, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் டேனி, நடிப்பு பயிற்சி பட்டறையின் மூலம் பல நடிகர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், ராதா ரவி, சீமான், வெற்றிமாறன், தம்பி ராமையா உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து அதன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த நடிப்பு பயிற்சி பட்டறை வருகிற மே 19, 20, 21ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டேனியின் நடிப்பு பயிற்சி பட்டறைக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்