கவனம் ஈர்க்கும் தண்டட்டி பட டிரைலர்
இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தண்டட்டி'. இந்த திரைப்படத்தில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'தண்டட்டி' திரைப்படம் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.