ரிலீஸ் தேதியை மாற்றிய அஸ்வின்ஸ் படக்குழு.. குழப்பத்தில் ரசிகர்கள்

வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. இப்படம் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.

Update: 2023-06-07 18:06 GMT

தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.

இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து அஸ்வின் திரைப்படம் வருகிற 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் வசந்த் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். காரணம் இல்லாமல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்