இணையத்தில் வைரலாகும் லவ் டுடே இயக்குனரின் புகைப்படம்

கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Update: 2023-03-15 16:41 GMT

2019ம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து பெற்ற படம் கோமாளி. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்தது. இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இவானா, யோகி பாபு, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் வசூலை குவித்து 100 நாட்களை கடந்தது.

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் 100வது நாள் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்