நடிகைகளை தரக்குறைவாக பேசினாரா விஜய்...? - வாரிசு பட நடிகரின் பேட்டியால் வெடித்த சர்ச்சை...!

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி விஜய் கதாநாயகிகளை குதிரையோடு ஒப்பிட்டு பேசுகிறார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

Update: 2022-12-10 10:14 GMT

சென்னை

நடிகர் விஜய்யின் 66-வது படம் வாரிசு. தெலுங்கு திரையுலகில் முன்னணி டைரக்டராக வலம் வரும் வம்சி பைடிபல்லி தான் இப்படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

வாரிசு படத்துக்கு தமன் இசையமைத்து உள்ளார். இதுவரை இப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

வருகிற டிசம்பர் 24-ந் தேதி வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

வாரிசு படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரஜினியின் கபாலி மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்களுக்கு செய்தது போல் வாரிசு படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம், இவர் சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி சொன்ன ஒரு தகவல் தற்போது பூதாகரமாக வெடித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யூடியூப் சேனலுக்கு ஷியாம் அளித்த பேட்டியில் குஷி படப்பிடிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான் என்று சொல்கிறார்கள் என விஜய்யிடம் கேட்டேன். அதற்கு அவர் மேலே கை காட்டி எல்லாம் இறைவன் செயல் என்றார். பிறகு திடீரென்று நான் ஒரு நாள் ஹீரோவாகி விட்டேன். '12பி' படத்தில் நாயகனாக அறிமுகமானது அண்ணனை சந்தித்தேன். அப்போது அவர் என்னடா வரும் போதே சிம்ரன், ஜோதிகானு இரண்டு குதிரையோட வர யாருடா நீ என கேட்டார் " என்று கூறி உள்ளார்.

இவ்வாறு நடிகைகளை குதிரையுடன் விஜய் ஒப்பிட்டு பேசியதாக கூறப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

மேலும் செய்திகள்