வாரிசா..துணிவா..? - போஸ்டர் யுத்தத்தில் விஜய், அஜித் ரசிகர்கள்
மதுரையில் போஸ்டர் யுத்தத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை,
மதுரையில் போஸ்டர் யுத்தத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
இந்நிலையில், துணிவு மற்றும் வாரிசு படங்களை வைத்து ஒப்பீடு செய்து, இரு தரப்பு ரசிகர்களும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இரு தரப்பினரும் மாறி, மாறி எதிர் தரப்பை தாக்குவது போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஓட்டி வருவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.