படப்பிடிப்பு அரங்கில் செல்பி எடுத்துக்கொண்ட திரிஷா, ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் படத்தின் சரித்திர கால அரண்மனை அரங்கில் திரிஷா, ஐஸ்வர்யா ராய் சேர்ந்து நின்று போஸ் கொடுத்து செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி உள்ள சரித்திர கதையம்சம் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள், டிரெய்லர், மன்னர் காலத்து ஆடை ஆபரணங்கள் அணிந்துள்ள நடிகர், நடிகைகளின் தோற்றங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்துள்ளனர். கதைப்படி இருவரும் பகையாளிகளாக இருந்தாலும் படப்பிடிப்பில் சேர்ந்து நடித்தபோதுதோழிகளாகி விட்டனர். சரித்திர கால அரண்மனை அரங்கில் சேர்ந்து நின்று போஸ் கொடுத்து செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
அந்த செல்பி புகைப்படத்தை திரிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.