தமிழக முதல் அமைச்சரின் உடல் நலத்தோடு தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருக்கிறது - வைரமுத்து டுவீட்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-14 03:04 GMT

சென்னை,

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய பாடலாசிரியர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழ்நாட்டு முதலமைச்சரின் உடல் நலத்தோடு தமிழர் நலன் சம்பந்தப்பட்டிருக்கிறது.

அவர் விரைந்து நலமுறவும் தொடர்ந்து பலம் பெறவும் புயலாய் வலம் வரவும் செயலால் வளம் தரவும் வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்