தேசிய விருதுக்கு ஆசைப்படும் தமன்னா
‘‘மதூர் பண்டார்கர் இயக்கத்தில் நான் நடித்த பப்ளி பவுன்சர் இந்தி படத்துக்காக எனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா இப்போது இந்தி திரையுலகம் பக்கம் ஒதுங்கி இருக்கிறார். அங்கு 3 படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் ஒன்று மதூர் பண்டார்கர் இயக்கத்தில் தயாராகி உள்ள பப்ளி பவுன்சர். இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று நம்புகிறார்.
இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில்,''மதூர் பண்டார்கர் இயக்கத்தில் நான் நடித்த பப்ளி பவுன்சர் இந்தி படத்துக்காக எனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். இந்த படத்தில் அரியானாவை சேர்ந்த பெண்ணாக நடித்தேன். முதல் முறையாக பெண் பவுன்சர் கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையில் இது சிறந்த படம். மதூர் பண்டார்கர் படங்களில் நடித்த கதாநாயகிகளுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. எனக்கு கூட இந்த படத்திற்கு விருது பெற ஆசை உள்ளது. விருது கிடைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.
வட இந்தியாவில் சில லேடி பவுன்சர்களின் வாழ்க்கையை பார்த்து இந்த கதையை எழுதியதாக இயக்குனர் தெரிவித்தார். இந்த படத்துக்கு எனக்கு நிச்சயம் விருது கிடைக்கும்" என்றார்.