படப்பிடிப்பில் சன்னி லியோனுக்கு காயம் ...! ரசிகர்கள் கவலை...!

Update: 2023-01-31 09:37 GMT

சென்னை

சன்னி லியோன் இந்தி படங்கள் தவிர மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி அவர் நடித்த 'மை கோஸ்ட்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பு தளம் ஒன்றில் சன்னிக்கு காயம் ஏற்பட்டது. பெரிய காயம் இல்லை. வலது கால் விரலில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வந்தது. இதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

சன்னி லியோன் தனது காலில் ஏற்பட்ட காயத்தை காட்டும் வீடியோவை பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். சன்னி என்ன நடந்தது என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சன்னி லியோன் படும் வேதனையை பார்க்க முடியாது என பலரும் கமெண்ட்களில் கூறி வருகின்றனர். மேலும் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ வைரலாகி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்