பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சிம்பு

பாலிவுட் சினிமாவில் சத்ராம் ரமானி இயக்கும் ‘டபுள் எக்ஸ்.எல்.' என்ற படத்தில் சிம்பு பாடகராக அறிமுகமாகி இருக்கிறார்.

Update: 2022-10-16 03:49 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.

சிம்பு தற்போது கிருஷ்ணா டைரக்டு செய்து வரும் 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது.

இதற்கிடையே பாலிவுட் சினிமாவில் சிம்பு அறிமுகமாகி இருக்கிறார். சத்ராம் ரமானி இயக்கும் 'டபுள் எக்ஸ்.எல்.' என்ற படத்தில் 'தாலி... தாலி...' என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த படத்தில் ஹீமா குரோஷி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகத் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் பாடகராக சிம்பு அறிமுகமாகி இருக்கிறார். ரசிகர்களும், திரை உலகினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்