ஓ.டி.டி.யால் சினிமா தொழில் பாதிக்குமா? ஷாருக்கான் விளக்கம்
எத்தனை மாற்றங்கள் வந்தாலும் தியேட்டரில் சினிமா பார்ப்பதை மக்கள் நிறுத்தப்போவது இல்லை என்று ஷாருக்கான் விளக்கமளித்துள்ளார்
பொழுதுபோக்கு துறையில் ஓ.டி.டி. தளங்கள் சமீப காலமாக பெரிய வளர்ச்சி பெற்று வருகின்றன. ஓ.டி.டி. தளங்களில் திரைப்படங்கள், வெப் தொடர்களை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஓ.டி.டி.யால் சினிமா தொழில் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் திரையுலகினர் மத்தியில் நிலவுகிறது.
இதுகுறித்து ஷாருக்கான் அளித்துள்ள பேட்டியில், ''ஓ.டி.டி.யில் படங்கள் வெளியானாலும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவதை நிறுத்த மாட்டார்கள். சினிமா இதுபோன்ற பல சவால்களை ஏற்கனவே சந்தித்துள்ளது. எதிர்காலத்திலும் இது தொடரும். எத்தனை மாற்றங்கள் வந்தாலும் தியேட்டரில் சினிமா பார்ப்பதை மக்கள் நிறுத்தப்போவது இல்லை. தொலைக்காட்சி வந்தது, 'விசிஆர்' வந்தது ஆனாலும் தியேட்டர்களில் படம் பார்த்தார்கள். எப்போதும் சினிமாவுக்கு பிரச்சினை வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதற்கு தகுந்தாற்போல் சினிமா தன்னை மாற்றிக்கொண்டு மீண்டும் மக்களை தன் பக்கம் அழைக்கிறது. கொரோனாவுக்கு பிறகுதான் சினிமாவுக்கு சில சங்கடங்கள் வந்தன. அவை சரியாகி விடும்' என்றார்.