'துணிவு' படத்தின் செகண்ட் லுக் வெளியீடு...! அஜித் ரசிகர்கள் உற்சாகம்
'துணிவு' செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது
சென்னை,
நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு 'துணிவு' எனபடக்குழு தலைப்பிட்டுள்ளது . அதோடு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது. கடந்த சில நாட்களாகவே பர்ஸ்ட் லுக் குறித்த பேச்சு வெளியான நிலையில் அதிரடியாக அதை அறிவித்துள்ளது படக்குழு.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் 'துணிவு' செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.இந்த போஸ்டர் அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Mass + Class #Thunivu second poster#AK61 #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth @BoneyKapoor @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @SuthanVFX #CSethu #SameerPandit pic.twitter.com/iiVxejhsTW
— Zee Studios (@ZeeStudios_) September 22, 2022