சசிகுமார் நடிக்கும் 'காரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'காரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'காரி'. இந்த படத்தில் நடிகை பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சம்யுக்தா சண்முகநாதன், பாலாஜி சக்திவேல், ஜே.டி.சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். காதல், ஆக்சன், ஜல்லிக்கட்டு என கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'காரி' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.