சந்தானம் நடித்துள்ள 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் புதிய அப்டேட்..!
சந்தானம் நடித்துள்ள 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் 'ஒப்பாரி ரேப்' பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நவீன் பாலிஷெட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' என்ற திரைப்படம் தமிழில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். 'வஞ்சகர் உலகம்' திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 'ஒப்பாரி ரேப்' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
எம்.சி.சன்னா, கெடக்குழி மாரியம்மா எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, எம்.சி.சன்னா, லட்சுமி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.