சல்மான்கான் பிறந்த நாள் விழா ...! 62 வயது முன்னாள் காதலிக்கு முத்தம்...! ரசிகர்களுக்கு தடியடி...!
சல்மான் கான் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மும்பை
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான் கான் தனது 57வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
பாலிவுட் சினிமாவின் சல்மான் கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர், சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்தப் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சல்மான் கானும், அவர் மருமகனும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர். விழாவில் சல்மான் கான் கறுப்பு ஆடை அணிந்து காணப்பட்டார். சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு வெளியில் ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்
பிறந்த நாளுக்கு நடிகர் ஷாருக்கான் நள்ளிரவில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வழக்கமாகவே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஷாருக்கான் நள்ளிரவில் வருவதுதான் வழக்கம். ஷாருக்கானை சல்மான் கான் வீட்டின் வாசல்வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். சல்மான் கானும், ஷாருக் கானும் ஒரே கலரில் ஆடை அணிந்திருந்தனர்.
பிறந்த நாள் விழாவுக்கு வந்த தனது முன்னாள் காதலியான நடிகை சங்கீதா பிஜ்லானிக்கு முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அந்த நடிகைக்கு தற்போது வயது 62 என்பது குறிப்பிடத்தக்கது.
57 வது பிறந்தநாளில் சல்மான்கானை பார்க்க அவரது வீட்டிற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் கூடினர்.அவர் பால்கனியில் இருந்து தனது ரசிகர்களை நோக்கி கை அசைத்தார்.
வெளியில் திரண்டிருந்த கூட்டம் அதிக அளவில் இருந்ததால், போலீசார் கட்டுபடுத்தமுடியால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கட்டுப்படுத்தினர்.
போலீசார் தடியடி நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் துரத்தும்போது சல்மான் ரசிகர்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு ஓடுவதைக் காணலாம்.
யார் இந்த சங்கீதா பிஜிலானி
சங்கீதாவும் சல்மானும் 1986 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் இருக்கும் போது ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். சங்கீதா சல்மானைவிட 5 வயது மூத்தவர்.இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். இருவரின் திருமண பத்திரிகைகள் கூட அச்சிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும், ஏதோ ஒரு காரணங்களுக்காக நடிகையின் முடிவின் படி திருமணம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் இறுதியில், சங்கீதா கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனை மணந்தார், இருப்பினும், அங்கேயும் அவர் மனம் உடைந்ததால், 2010 இல் விவாகரத்து பெற்றார்.சங்கீதாவும் சல்மானும் இப்போது நல்ல நண்பர்கள்