எகிறும் எதிர்பார்ப்பு..! 'தளபதி 67 ' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .!

இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2023-01-31 10:23 GMT

சென்னை,

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது தளபதி 67 படக்குழு

இந்த நிலையில் . தளபதி 67 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்