பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து பியர் கிரில்ஸ் சாகச நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்..!!

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ் சாகச பயணம் மேற்கொண்டார்.

Update: 2022-06-10 10:59 GMT

Image Courtesy : @NetflixIndia

மும்பை,

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சாகச விரும்பி, எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் . இவர் தன்னுடைய தொலைக்காட்சி தொடரான "மேன் வெர்சஸ் வைல்ட்" மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.

அதுமட்டுமின்றி மிக இளவயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட பிரிட்டிஷ் நபர்களில் இவர் ஒருவராவார், இந்த சாதனையை அவர் தன்னுடைய 23 வயதில் செய்தார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அபாயகரமான காடுகள், பாலைவனங்கள் போன்றவற்றில் இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் தான் மட்டுமல்லாமல் பிரபலங்களுடன் காட்டுக்கு பயணம் செய்வது என்பதும் நடைபெறுகிறது. அந்த வகையில், பியர் கிரில்ஸ், பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் மேற்கொண்ட சாகச பயணம் பார்வையாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் பியர் கிரில்ஸ் காட்டுப் பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பியர் கிரில்ஸின் சாகசப் பயணம் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடைபெற்றது.

இந்த நிலையில் அவர் தற்போது இந்தி நடிகர் ரன்வீர் சிங் உடன் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சாகச நிகழ்ச்சி தனியார் ஓடிடி தளமான நெட்பிலிக்சில் ஜூலை 8 ஆம் தேதி ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோ நெட்பிலிக்சில் இன்று வெளியாகியுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்