போதைப்பொருளை ஊக்குவிப்பதாக நோட்டீஸ்... தியேட்டரில் ஓடிய படம் நிறுத்தம்

‘நல்ல சமயம்' என்ற படத்தில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாக மத்திய கலால் துறை படத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியது.

Update: 2023-01-04 02:45 GMT

மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த 'ஒரு அடார் லவ்' படத்தை இயக்கி பிரபலமான ஓமர் லூலு தற்போது 'நல்ல சமயம்' என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த நிலையில் படத்தில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் சர்ச்சை கிளம்பியது.

இதையடுத்து மத்திய கலால் துறை படத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நல்ல சமயம் படத்தை தியேட்டர்களில் இருந்து வாபஸ் பெறுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இதையடுத்து தியேட்டர்களில் நல்ல சமயம் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. கலால் துறை நோட்டீசை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், தீர்ப்பு வந்த பிறகு படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவேன் என்றும் ஓமர் லூலு அறிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்