56 வயது நடிகரை காதலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே...?
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே, தற்போது பாலிவுட்டில் பிசியாக வலம் வருகிறார்.
மும்பை
மிஷ்கின் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தில் ஜீவா ஜோடியாக சக்தி என்ற கேரக்டரில் நடித்தார் பூஜா ஹெக்டே. ஒல்லியான தேகம், நல்ல உயரம் என முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்த பூஜா ஹெக்டே, அதன்பின்னர் டோலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அதேபோல், 'மொஹஞ்சதாரோ' என்ற பாலிவுட் படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாகவும் நடித்திருந்தார்.
டோலிவுட்டில் தொடர்ச்சியாக நடித்து வந்த பூஜா ஹெக்டேவுக்கு கடைசியாக அல்லு அர்ஜுனுடன் நடித்த 'ஆலா வைகுந்தபுரம்லு' படம் மட்டுமே சூப்பர் ஹிட் ஆனது. அதன்பின்னர் பிரபாசுடன் நடித்த 'ராதே ஷ்யாம்', தமிழில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த 'பீஸ்ட்', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த 'ஆச்சர்யா' ஆகிய படங்களில் நடித்தார்
தற்போது இந்தியில் ரன்வீர் சிங் உடன் 'சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பாலிவுட்டில் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே நெருக்கம் காட்டி வருவது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பூஜா ஹெக்டே, சல்மான் கானுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு படத்திலும் இருவரும் ஜோடி சேரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ல்மான் கானுக்கு தற்போது 56 வயதாகிவிட்டது. அதேபோல் பூஜா ஹெக்டேவுக்கும் 32 வயதாகிவிட்டது. இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான் தயாரிப்பு நிறுவனம் பூஜா ஹெக்டேவை அடுத்த 2 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இருவரும் இப்போது ஒன்றாக நேரத்தை செலவிடுகிறார்கள் என சல்மான் கான் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் தொடங்கி தமிழில் இருந்து சென்ற அசின் வரை சல்மான் கானின் காதல் லிஸ்ட்டில் பல நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.
அடிக்கடி ஜோடியை மாற்றும் சல்மான் கான், இந்தமுறை பூஜா ஹெக்டேவை பிடித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் சல்மான்கான், பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து இதுவரை அவர்களின் காதல் குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.