கொச்சின் விமான நிலையத்தில் புதுமண தம்பதி - வைரலாகும் க்ளிக்!
கொச்சின் விமான நிலையத்தில் விக்னேஷ்சிவன் நயன்தாரா ஜோடி கைகோர்த்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
கொச்சி,
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது கொச்சின் சென்றதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கொச்சின் விமானநிலையத்தில் இருவரும் கைகோர்த்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ரசிகர் ஒருவர் எடுக்க அந்த நபரை விக்னேஷ் சிவன் கண்டுகொள்ளாமல் சென்றார். ஆனால் நயன்தாரா அந்த ரசிகரை ஒரு சின்ன புன்முறுவலோடு கடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.