அசிங்கம்...! மானமே போச்சு இனி இந்தியாவே திரும்ப மாட்டேன்...! டைரக்டர் எடுத்த படத்தால் நடிகை கோபம்
நடிகையாக ரசிகர்கள் முன் அழகாக தோன்றுவதைத்தான் அனைவரும் விரும்புவார்கள். இது காமெடிக்கு செய்தாலும் முறையற்ற ஒன்றுதான் என விமர்சிக்கிறார்கள்.
சென்னை
மலையாள நடிகை மகிமா நம்பியார் தமிழில் சாட்டை படத்தில் அறிமுகமானார். பின்னர் அசுரகுரு, மகாமுனி, ஓ மை டாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் ஆண்டனியுடன் இணையும் 2 வது படம் ரத்தம் இப்படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டைரக்டர் சி.எஸ்.அமுதன்.
இப்படத்தின் படபிடிப்பு முடிந்து திரும்பிய நிலையில் வாகனத்தின் பயணத்தில் மகிமா நம்பியார் அசந்து தூங்கியுள்ளார். எப்பேற்பட்ட அழகியும், அழகனும் தூங்கும்போது அவர்கள் சுய நினைவு இல்லாமல் இருப்பர்.
இப்படி அசந்து வாய்பிளந்து தூங்கியுள்ளார் மகிமா நம்பியார். அப்போது உடன்வந்த டைரக்டர் சி.எஸ் அமுதன் அதை படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரத்தம் டீமின் கடும் உழைப்பு என பதிவிட்டு விஜய் ஆண்டனி, மகிமா நம்பியாரை டேக் செய்து போட்டுள்ளார்.
படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடின உழைப்புதான் என சிலர் கிண்டலடித்தும், சிலர் ஒரு பெண் தூங்குவதை அவருக்கு தெரியாமல் படம் எடுப்பது தவறு அதை பகிர்வது அதைவிட தவறு என விமர்சித்துள்ளனர்.
நடிகையாக ரசிகர்கள் முன் அழகாக தோன்றுவதைத்தான் அனைவரும் விரும்புவார்கள். இது காமெடிக்கு செய்தாலும் முறையற்ற ஒன்றுதான் என விமர்சிக்கிறார்கள்.
மகிமா நம்பியார் இந்தப்படத்தைப்பார்த்து "அய்யோ அசிங்கம் அவமானமாக போச்சு இனி நான் இந்தியா பக்கமே திரும்ப மாட்டேன் என பதிவிட்டு தயாரிப்பாளரின் கடின உழைப்பு படம் எங்கே" எனக் கிண்டலாக கேட்டுள்ளார்.
மகிமா சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவருடைய போட்டோவை பார்க்கும்போது என் போட்டோவை பார்ப்பது போல் உள்ளது என விஜய் ஆண்டனி கூறி உள்ளார்.