புதிய படத்துக்கு தயாராகிறார், 'லெஜண்ட்' சரவணன்

தன்னுடைய அடுத்த படம் ‘லெஜண்ட்' படத்தை காட்டிலும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-12 08:35 GMT

ஜேடி.ஜெர்ரி இயக்கத்தில் 'லெஜண்ட்' சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

ஆனால் எந்த விமர்சனங்களையும் கண்டு கொள்ளாமல் 'லெஜண்ட்' சரவணன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக தீவிர கதை விவாதத்தில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். சில டைரக்டர்களிடமும் கதை கேட்டு வருகிறார்.

சினிமாவில் எத்தனையோ விமர்சனங்களையும், கேலிகளையும் தாண்டி வந்து சாதித்த நடிகர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் 'லெஜண்ட்' சரவணனும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

''காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை நிறைந்த சமூக அக்கறையுள்ள படமாக இருக்க வேண்டும். அதுதான் பொது மக்களை ரசிக்கச் செய்யும்'' என்று டைரக்டரிடம் கோரிக்கை விடுத்து தான் கதை கேட்கவே தொடங்குகிறாராம், 'லெஜண்ட்' சரவணன்.

மேலும் செய்திகள்