கோயம்பேடு ரோகிணி திரையரங்கை அடித்து நொறுக்கிய விஜய், அஜித் ரசிகர்கள்

ரோகிணி திரையரங்கை ,விஜய் , அஜித் ரசிகர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்

Update: 2023-01-11 12:23 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாகவே அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது துணிவு மற்றும் வாரிசு தான். இதில் அஜித் நாயகனாக நடித்துள்ள துணிவு எச்.வினோத்தும், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் வாரிசு படத்தை வம்சியும் இயக்கி இருந்தனர். இந்த ஒருபடங்களை தயாரித்ததும் வேறுமாநில தயாரிப்பாளர்கள் தான். துணிவு படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரும், வாரிசு படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜுவும் தயாரித்து இருந்தனர். துணிவு படத்துக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் முதன்முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார். அதேபோல் வாரிசு படத்துக்கு இசையமைத்துள்ள தமனும் விஜய் உடன் பணியாற்றியுள்ளது இதுவே முதன்முறை.

இந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் இன்று வெளியானது.மிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியானது. இந்நிலையில், வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தியேட்டரில் தற்போது வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியானது. வாரிசு அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி வெளியானது.

இந்த நிலையில், கோயம்பேடு ரோகிணி திரையரங்கை ,விஜய் , அஜித் ரசிகர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். பவுன்சர்களை நிலைகுலைய செய்து தியேட்டருக்குள் ரசிகர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திரையரங்கிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்