கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி அவதாரம்

கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கொள்கையை விட்டுக்கொடுத்து கவர்ச்சியாக நடிக்க தயாராகி உள்ளார்.

Update: 2022-11-04 04:39 GMT

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து குடும்ப பாங்கான படங்களில் நடிக்கவே விரும்பினார். அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக தோன்றவும், கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்கவும் மறுத்தார். தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்தார். ஆனால் அந்தப் படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்காமல் தோல்வியைத் தழுவின. இயக்குனர்களும் கீர்த்தி சுரேஷ் பாலிசியால், வணிகப் படங்களில் நடிக்க அவரை அணுகவில்லை.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கொள்கையை விட்டுக்கொடுத்து கவர்ச்சியாக நடிக்க தயாராகி உள்ளார். இதனை நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, தன்னை கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்