'காண்டம்' 'வெட்கக்கேடு'...! தி.மு.க.வை விளாசும் கஸ்தூரி...! பரபர டுவீட்கள்

தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் ஷர்மிளா காஸ்துரியை டேக் செய்து ஒரு டுவீட் போட்டார்.

Update: 2022-10-28 11:17 GMT

சென்னை

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய சைதை சாதிக் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நடிகை குஷ்பு வெளியிட்ட டுவீட்டுக்கு, டுவிட்டரிலேயே மன்னிப்பு கேட்டுள்ளார் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, "ஆண்கள் பெண்களை தவறாகப்பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை 'கலைஞரை பின்பற்றுபவர்கள்' என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா?" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

குஷ்புவின் டுவீட்டுக்கு பதிலளித்துள்ள கனிமொழி, "ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாதது.

இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடிகிறது. ஏனெனில் எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது இல்லை. ' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை குஷ்பு,"உங்களுடைய நிலைப்பாட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால், நீங்கள் எப்போதும் பெண்களின் மதிப்பு மற்றும் சுயமரியாதைக்காக குரல் கொடுத்தவர்," என்று கூறியுள்ளார்.

இதனையொட்டி நடிகை கஸ்தூரியும் ஒரு டுவீட் போட்டிருந்தார். அந்த டுவீட்டில் வெறுக்கத்தக்க ஹேஷ் டேக் ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார். அந்த ஹேஷ் டேகை கஸ்தூரியின் ஆதரவாளர்கள் டிரெண்ட் செய்து வந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் ஷர்மிளா காஸ்துரியை டேக் செய்து ஒரு டுவீட் போட்டார். அதில், அந்த பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்கப்பட வேண்டியது மேடம்.

இருப்பினும், நீங்கள் தொடங்கி வைத்த திராவிடிய_பசங்க என்ற ஹேஷ்டேகை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தொடங்கப்பட்ட #திராவிடிய_பசங்க என்ற ஹேஷ்டேக்கில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நீங்களும் அதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று மறைமுகமாக கூறினார்.

அதற்கு கஸ்தூரி ரிப்ளை செய்துள்ளார். கஸ்தூரியின் டுவீட்டில், ''மன்னித்தல் என்பது ஏற்றுக்கொள்வதும் ஊக்குவிப்பதும் ஆகும். கண்டனம் என்றால் எதிர்ப்பு என்று பொருள். கடவுளுக்கு நன்றி, இவர் காண்டம் (Condom) என்று எழுதவில்லை. அவர் (ஷர்மிளா) உண்மையான டாக்டரா அல்லது வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா? எதுவாக இருந்தாலும், திராவிடம் என்பது வெட்கக்கேடான கருத்து என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி'' என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.




Tags:    

மேலும் செய்திகள்