பல மாத முடக்கத்திற்கு பின் செயல்பாட்டிற்கு வந்த நடிகை கங்கனா டுவிட்டர் கணக்கு - முதல் டுவிட் என்ன?

கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி முடக்கப்பட்டது.

Update: 2023-01-24 13:15 GMT

டெல்லி,

இந்தி திரைத்துறையின் பிரபல நடிகை கங்கனா ரனாவத். இவர் கடந்த ஆண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இந்தி நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர், மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3 குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும், மேற்குவங்காளத்தில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றிபெற்ற பின் அங்கு நடந்த வன்முறை தொடர்பாகவும் கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து டுவிட்டர் விதிமுறைகளை மீறியதாக கங்கனாவின் டுவிட்டர் கணக்கை கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக நீக்கியது.

இந்நிலையில், சுமார் 8 மாதகால தடைக்கு பின் நடிகை கங்கனாவின் டுவிட்டர் பக்கம் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கங்கனாவின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கிய டுவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை மீண்டும் செயல்பட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

தனது டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் நடிகை கங்கனா ஒரு டுவிட் செய்துள்ளார். பல ஆண்டு கால தடைக்கு பின் செயல்பாட்டிற்கு வந்த தனது டுவிட்டர் கணக்கில் நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்ட முதல் டுவிட்டில், அனைவருக்கும் வணக்கம், இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியாக உள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்