'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-22 15:58 GMT

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்திருந்தனர். கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகளவில் ரூ. 370 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வருகிற ஜூலை மாதம் 8-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. விக்ரம் படத்தின் டிஜிட்டல் உரிமை 98 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்