கமல்ஹாசன் சம்பளம் உயர்ந்தது

‘விக்ரம்' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் சம்பளம் 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2022-09-30 01:24 GMT

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்ட படம், 'இந்தியன்-2'. சில சிக்கல்களை கடந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்காக கமல்ஹாசன் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் தொடங்கப்பட்ட சமயம் கமல்ஹாசனின் சம்பளம் ரூ.35 கோடி என்று பேசப்பட்டது. இதற்கிடையில் 'விக்ரம்' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் சம்பளம் 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்