சந்தானம் நடிக்கும் 'சாண்டா 15' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
நடிகர் சந்தானம் நடிக்கும் 'சாண்டா 15' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை,
நடிகர் சந்தானம் தற்போது கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'சாண்டா 15' என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் 15-வது திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் ராகினி திரிவேதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தமிழில் அறிமுகமாகிறார். இந்த நிலையில் 'சாண்டா 15' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் சந்தானம், காமெடியான பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு தயாராகும்படி தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் போன்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.