ரோஜா மகள் சினிமாவுக்கு வருகிறாரா?
நடிகையும், ஆந்திர மாநில மந்திரியுமான ரோஜாவின் மகள் அன்சு மாலிகா விரைவில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது.
துருவ் விக்ரம் ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அன்சு மாலிகா சினிமாவுக்கு வருகிறாரா, இல்லையா? என்பது குறித்து அவரது தந்தையும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"அன்சு மாலிகா தற்போது மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் 4 வருடங்கள் அவர் அங்குதான் இருக்க போகிறார். எனவே அவர் நடிக்க இருப்பதாக வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி மட்டுமே".
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் ரோஜா மகள் சினிமாவுக்கு வருவதாக உலா வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.