உலகின் மிக அழகான பெண்கள்... டாப் 10-ல் இடம் பிடித்த இந்திய நடிகை
உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு நடிகை மட்டும் இடம் பிடித்துள்ளார்.
உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் பட்டியலை லண்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் ஜூலியன் டி சில்வா ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார். இந்தப் பட்டியல் உலக அளவில் மிகப் பிரபலமாக பேசப்படும் ஒன்றாகும். கண், காது, மூக்கு, முக அமைப்பு என மொத்தம் 12 விதமான விஷயங்கள் ஆராயப்பட்டு, அதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப் படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டாப் 10 அழகான பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஹாலிவுட் நடிகை ஜோடி காமர் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு நடிகை மட்டும் இடம் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேதான் அது. 91.22 சதவீத புள்ளிகளுடன் இந்தப் பட்டியலில் 9-வது இடத்தை அவர் பெற்றிருக்கிறார். அவருக்கு உலக அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.