'இந்தியன் 2' விரைவில் ஆரம்பம் - உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதி பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் நடித்து பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் மீதி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றும், படத்தை திரையரங்கில் கானவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இது தொடர்பாக கமல்ஹாசனிடம் கேட்டபோது அவர், இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறினார். இதனை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலினும் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற டான் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் போது அதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளது என்று கூறினார். இதனால் கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.