இன்று பிறந்த நாள் கொண்டாடும் "63 வயது ஆக்ஷன் அசூரன் நடிகர் பாலய்யா"

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Update: 2023-06-10 11:15 GMT

ஐதராபாத்:

நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என மாஸ் காட்டி வரும் பாலகிருஷ்ணாவுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

60 வயதை கடந்தாலும் ஆக்ஷனில் இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் பாலய்யா தற்போது பகவந்த் கேசரி படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மறைந்த என் டி ஆர் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாலய்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து ஜெய் பாலய்யா என முழக்கமிட்டு வருகின்றனர்.

நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி.ராமராவ் மற்றும் அவரது மனைவி பசவதாரகம் ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். சென்னையில் வளர்ந்த அவர்.

1974ம் ஆண்டு வெளியான தந்தை இயக்கிய ' தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலய்யா, கடந்த 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதுவரை 107 படங்களில் நடித்துள்ளார்.

1980களில், 'சாகசமே வாழ்க்கை' (1984), 'மங்கம்மாகரி மணவாடு' (1984), 'அபூர்வ சஹோதருலு' (1986), மற்றும் 'முவ்வா கோபலுடு' (1987) போன்ற படங்களின் மூலம் வணிக ரீதியாக வெற்றி பெற்றார்.

அவர் சுயசரிதை, வரலாற்று படங்களில் விரும்பி நடித்து உள்ளார். சித்தரித்தார். வெமுலவாடா பீமகவி,வீர சூர கர்ணன்,ஆதித்யா 369, கிருஷ்ணதேவராயா, மற்றும் அவரது 100வது படமான கவுதமிபுத்ர சதகர்ணி,ஆகிய படங்கள் குறிப்பிடதக்கவை.

'நரசிம்ம நாயுடு' (2001), 'சிம்ஹா' (2010), மற்றும் 'லெஜண்ட்' (2014) ஆகிய படங்களில் சிறந்த நடிகருக்கான மூன்று நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.

'நரசிம்ம நாயுடு,' 'சிம்ஹா,' 'ஸ்ரீராம ராஜ்யம்,' 'கவுதமிபுத்ர சதகர்ணி,' 'முவ்வா கோபாலுடு' மற்றும் 'ஆதித்யா 369' ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்று உள்ளார்.

பஞ்ச் வசனம், ஆக்ஷன் என பாலய்யாவின் வெறித்தனமான நடிப்புக்கு தெலுங்கு ரசிகர்கள் சொக்கிக் கிடக்கின்றனர் எனலாம்.

கண் அசைவில் கார்கள் பறப்பது, ஒரே மிதியில் லாரியை புரட்டிவிடுவது என இதுபோன்ற வீர சாகசங்களை பாலய்யா செய்தால் தான் ரசிகர்கள் நம்புவார்கள் என ரஜினி காந்தே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பாலய்யாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகின்றன. பாக்ஸ் ஆபிஸில் கிங்காக இருந்தாலும் ஒரு படத்துக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் தான் சம்பளமாக வாங்குகிறாராம்.

சினிமா, விளம்பரம் போன்றவைகளில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு 70 முதல் 80 கோடி வரை வருமானமாக கிடைக்கிறதாம். அதேபோல், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பாலய்யாவின் வீட்டின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது, அரண்மனை மாதிரி கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம், ஜிம், லிப்ட் என சகல வசதிகளும் உள்ளதாம். இதுதவிர மேலும் பல இடங்களிலும் பாலகிருஷ்ணாவுக்கு வீடுகள் உள்ளதாம்.

அதேபோல், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், போர்ஸ் பனமேரா கார்களை தான் அதிகமாக பயன்படுத்துவாராம். இந்த இரண்டு கார்களுமே தலா 2 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரேஞ்ச்ரோவர், பென்ஸ் போன்ற கார்களும் சொந்தமாக வைத்துள்ளாராம். ஒட்டுமொத்தமாக பாலகிருஷ்ணாவின் சொத்துமதிப்பு மட்டும் 600 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளீயாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்