திருமணத்துக்கு பிறகும் நடிக்க வந்த ஹன்சிகா
நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா இரு தினங்களுக்கு முன்பு தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு ஹன்சிகா நடிப்பாரா? அல்லது சினிமாவை விட்டு ஒதுங்குவாரா? என்ற கேள்விகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தேனிலவுக்கு செல்வதையும் தள்ளி வைத்து விட்டார். ஹன்சிகா கைவசம் 4 தமிழ் படங்களும், 2 தெலுங்கு படங்களும் உள்ளன. சினிமாவில் ஹன்சிகா தொடர்ந்து நடிப்பார் என்று அவரது தாயார் மோனா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது. ''ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தனக்கு பிடித்துவரையே அவர் மணந்து இருப்பது பெரிய அதிர்ஷ்டம். ஓ.டி.டி தளத்துக்காகவும் ஹன்சிகா 7 புதிய படங்களில் நடிக்க வேண்டி உள்ளது. திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தீவிரமாகவே நடித்துக்கொண்டு இருப்பார்" என்றார்.