"விரைவில் வருகிறது இந்தியன் -2" - உதயநிதி கொடுத்த மாஸ் அப்டேட்

இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்,.ஏ., கூறினார்.

Update: 2022-06-07 00:20 GMT

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சென்னையில் டான் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்,.ஏ., டான் படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

அப்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து முக்கிய தகவலை அவர் வெளியிட்டார்.அதாவது இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கிறாம் என்று கூறினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரமிட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்