சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: இப்போது விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதுபோல் அந்தக் காலத் தில் நடந்து இருக்கிறதா? (குரு, வேதாரண்யம்)
பதில்: தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலத்தில் எல்லாம் அது இல்லை . எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில்தான் அது ஆரம்பமானது. 'மோதல் வேண்டாம்' என்று இருபெரும் நடிகர்களும் ரசிகர்களை கே ட்டுக்கொண்டது உண்டு.
கேள்வி: சமந்தாவுடன் கடை வீதியில் கை கோர்த்து நடக்க ஆசைப்படுகிறேன். என் ஆசை நிறை வேறுமா? (பு.சூரி, விழுப்புரம்)
பதில்: சென்னையில் பிறந்த சமந்தா சிலம்பாட்டத்தில் மிகவும் கை தேர்ந்தவராம். அதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றுவிட்டால் போதும், சமந்தாவின் நட்பு கிடை த்துவிடும். ஆனால் உங்களது தலை பத்திரம்.
கேள்வி: லவ் டுடே படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன? (கார்த்திகேயன் , வேலூர்)
பதில்: காதல்தான் காரணம். தேவதாஸ் காலத்தில் இருந்து இன்றுவரை காதல் கதை கள் வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
கேள்வி: விஜயகாந்த் நடித்த முதல் படம் 'இனிக்கும் இளமையா '?, 'சட்டம் ஒரு இருட்டறையா '? (ஆனந்த், தஞ்சாவூர்)
பதில்: அவர் கேமரா முன் நின்ற முதல் படம் 'என் கேள்விக்கு என்ன பதில்'. இதில் ரஜினியின் தம்பியாக நடித்து இருந்தார். இரண்டு நாள் படப்பிடிப்பில் கலந்து கொ ண்டு விட்டு அதில் இருந்து விலகினார். 'இனிக்கும் இளமை ' படத்தில் வில்லனாக அறிமுகமானார். 'சட்டம் ஒரு இருட்டறை' அவருடைய ஆறாவது படம்.
கேள்வி: அப்போதெல்லாம் பாடல் காட்சியில் கவர்ச்சி நடனம் ஆட தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தார்கள். இப்போது அப்படி இல்லையே ஏன்? (பிரகாஷ், கோவை )
பதில்: இப்போது அந்த வேலையை கதாநாயகிகளே செய்கிறார்களே . அப்புறம் எதற்கு கவர்ச்சி நடிகைகள்.
கேள்வி: திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா மார்க்கெட் எப்படி உள்ளது?(ரேகா, சென்னை)
பதில்: நயன்தாரா மார்க்கெட் ஜோராகத்தான் உள்ளது. திருமணம், குழந்தை பிறப்பெல்லாம் சினிமாவில் பாதிப்பை உண்டாக்க வில்லை . குழந்தைகளை வளர்க்க படங்களை குறைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கிறாராம்.
கேள்வி: நடிகைகள் சமூக வலைத்தளங்களிலும் வருமானம் பார்க்கிறார்களாமே ?(சேரன், காஞ்சிபுரம்)
பதில்: உண்மை தான். ஒரு விளம்பரபதிவுக்கு ரூ.5 லட்சம் வரை வாங்குகிறார்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறார்கள்.
கேள்வி: 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த லைலா, சமீபத்தில் வெளியான ஒரு 'வெ ப்' தொ டரில் படுக்கையறை காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளாரே ? (எல்லப்பன், சேலம்)
பதில்: இதே துணிச்சல்தான் இப்போது பல மூத்த நடிகைகளுக்கும் வந்திருக்கிறதாம். விரைவில் 'வெ ப்' தொடர்களில் பலரது முகங்களை மீண்டும் காண வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: சமீப காலமாக கன்னட மொழி மாற்று படங்கள் தமிழில் அதிகம் வருகிறதே ? (முரளி, நாங்குனேரி)
பதில்: 'கே .ஜி.எப்' கன்னட படம் தமிழகத்தில் வசூலை அள்ளியதும், கன்னட திரை யுலகம் தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. இனி 'பான் இந்தியா ' படங்கள் தவிர்க்க முடியாதது.
கேள்வி: வடிவேல் - கோவை சரளா மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து குஷிப்படுத்துவார்களா? (ராம்பிரியா, மதுரை )
பதில்: ஆசை தான்... ஆனா ல் 'அடி'கொடுப்பதற்கும், 'அடி' வாங்குவதற்கும் இருவருக்குமே உடலில் முந்தைய தெம்பு இல்லையாம்!
கேள்வி: சிம்புவுக்கு எப்போது தான் திருமணம் ஆகும்? (ரமேஷ், நீலகிரி)
பதில்: இப்படி யாரும் இனி கேட்கக்கூடாது என்பதற்காகவே , பெண் பார்க்கும் படலத்தில் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் 'டும்... டும்...டும்...' சத்தம் கேட்குமாம்.
கேள்வி: வில்லன் நடிகர்கள் நகைச்சுவைக்கு தாவுவதும், நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் அதிகரித்து வருகிறதே ? (ராஜா,திருச்சி)
பதில்: 'இக்கரைக்கு அக்கரை பச்சை' தான். அதிலும் சின்னத்திரையில் இருந்து வந்த அந்த வாசமான நகைச்சுவை நடிகர், 'நடித்தால் கதாநாயகன் தான்' என்று ஒற்றைக்காலில் நிற்கிறாராம்.
கேள்வி: குருவியாரே ... சமீபத்திய 'கிசுகிசு' ஒன்று சொல்லுங்களேன் ... (அ.அறிவுச்செல்வன் , திருவண்ணாமலை)
பதில்: 'அரபிக்குத்து' ஆட்டம் போட்ட நடிகையும், இந்தியில் 56 வயதாகும் அந்த திருமணம் ஆகாத 'முரட்டு' நடிகரும் இப்போது பல இடங்களில் ஜோடியா க சுற்றுகிறார்களாம். கேட்டால் புதிய படத்துக்கான 'கதை விவாதம்' என்கிறார்களாம்.