படுகவர்ச்சி உடையில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன்...! 'பதான்' முதல் பாடல் வெளியானது...!

நீச்சலுடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார்.ஹாட் பிகினி தோற்றத்தில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Update: 2022-12-12 09:34 GMT

மும்பை

நடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகா படுகோனும் இணைந்து நடிக்கும் போதெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் பரபரப்பு ஏற்படும்.அவர்கள் இணைந்து நடித்த 'ஓம் சாந்தி ஓம்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

மீண்டும் இந்த ஜோடி 'பதான்' படத்தில் இணைந்து உள்ளன.படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும் போது பதான் 2023-ம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது.

நீச்சலுடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார்.ஹாட் பிகினி தோற்றத்தில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பதான்' படத்தில் ஷாருக்கான் வித்தியாசமான ஸ்டைலில் தோன்றுகிறார்.

கடற்கரையில் பிகினி உடையில் அவரது அட்டகாசமான தோற்றத்தைப் பார்த்து, ஷாருக் அவர் மீது மோகம் கொள்கிறார், அதே போல் ரசிகர்களின் இதயத் துடிப்பும் அதிகரித்துள்ளது

காதல் நாயகன் என்ற இமேஜை முறியடித்து வெள்ளித்திரையில் 'தேசியவாதி' பதானாக தோன்றப் போகிறார்.

4 வருடங்களுக்கு பிறகு வரும் தனது படத்தின் மீது ஷாருக்கானும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இனி வரும் படங்கள் சூப்பர்ஹிட் படங்களாக அமையும் என நம்புகிறார்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .


Tags:    

மேலும் செய்திகள்