''வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு'
சென்னை ,
நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு' . இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் .
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
#VendhuThanindhathuKaadu
— Gauthamvasudevmenon (@menongautham) June 28, 2022
https://t.co/UJ3X0aSZFG
We have a date with all of you.#VTKOnSep15th in theatres! @SilambarasanTR_ @arrahman
Produced by VelsFilmIntl @IshariKGanesh