சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் அஜித்தின் புகைப்படங்கள்..

உற்சாகமடைந்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Update: 2022-10-13 17:12 GMT

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார். இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்

இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. முதலில் புத்தர் சிலை முன்பு அஜித் தனது பைக்குடன் நிற்கும் புகைப்படம் வெளியானது. தற்போது அஜித் பைக்கில் சாகசம் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து புகைப்படம் வெளியாகுவதால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்