அஜித்தின் பைக் பயண மேப்! சமூக வலைதளங்களில் வைரல்...!

இந்தியாவில் அஜித் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Update: 2022-09-15 13:56 GMT

நடிகர் அஜித் தனது பிஎம்டபில்யூ பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது. ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித், ஏகே61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த புகைப்படங்களை அஜித்தின் நண்பரும் சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த பைக் சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "மனிதனும் அவரின் இயந்திரமும்" என தலைப்பிட்டு டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கருப்பு வெள்ளை நிறத்தில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. உணவகத்திலும் சாலையிலும் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.

இந்த நிலையில் அஜித்குமாரின் பைக் ரைடிங் சுற்றுப் பயணத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு பைக் ரைடிங் உலக சுற்றுப் பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித் இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு 2023 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் இந்தியாவில் அவர் மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தின் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்