அஜித்குமார் படத்தின் தலைப்பு கசிந்ததா?

அஜித்தின் 61-வது படத்துக்கு துணிவே துணை என்ற தலைப்பை வைக்க படக்குழுவினர் பரிசீலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

Update: 2022-09-21 01:27 GMT

அஜித்குமார் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். இவர்கள் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.

படப்பிடிப்பு ஓய்வில் அஜித்குமார் இமயமலை பகுதியில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. கார்கில் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செய்தார். பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்றும் வழி பட்டார்.

தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளார். பாங்காக்கில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அஜித்தின் 61-வது படத்துக்கு துணிவே துணை என்ற தலைப்பை வைக்க படக்குழுவினர் பரிசீலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. இந்த தலைப்பை ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள்.

துணிவே துணை தலைப்பில் 1976-ல் ஜெய்சங்கர் நடித்த படம் வெளியானது. ஆனாலும் அஜித் படத்துக்கு துணிவே துணை பெயர் வைப்பது உண்மையா என்பதை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்