நடிகர் சர்வானந்த் திருமணம்

வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பெண்ணை சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள முடிவாகி இருப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது.

Update: 2023-01-07 02:51 GMT

தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த். ஜே, கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். சர்வானந்த் திருமணம் குறித்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவர் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக பேசினர்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சர்வானந்த் பங்கேற்று பேசும்போது நடிகர் பிரபாஸ் திருமணம் முடிந்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும் என்றார். இந்த நிலையில் வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பெண்ணை சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள முடிவாகி இருப்பதாக புதிய தகவல் பரவி உள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தை நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் பிரபல அரசியல்வாதி ஒருவரின் பேத்தி என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை சர்வானந்த் மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்