ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த 4 பிரபலங்கள்..! அப்டேட் வெளியிட்ட படக்குழு
இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது
சென்னை,
அண்ணாத்த படத்தை தொடர்ந்து 'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் படத்தை இயக்குகிறார். அனிரூத் இசை அமைக்க உள்ள இந்த திரைப்படத்தை, எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் ஜெயிலர் படத்தின் தலைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியாகி இருந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது.
The cast of #Jailer
— Sun Pictures (@sunpictures) August 24, 2022
Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy