பச்சை குத்துவதை நிறுத்துங்கள்- ரசிகர்களுக்கு கவர்ச்சி நடிகை அறிவுரை
நீங்கள் யாரும், யார் பெயரையும் பச்சை குத்திக்கொள்ள வேண்டாம் என்று ரசிகர்களுக்கு இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019-ல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணமான தகவலை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரிதேஷை ராக்கி சாவந்த் பிரிந்தார். காதலித்தபோது ரிதேஷ் பெயரை, ராக்கி தனது இடுப்புக்கு மேல் பச்சைக் குத்தியிருந்தார். அதை தற்போது நீக்கியுள்ளார்.
பச்சை குத்தியதை அழிப்பதற்காக சென்ற அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், உடலில் பச்சை குத்தியிருந்த ரிதேஷின் பெயரை டாட்டூ கலைஞர் அழிக்கிறார். இதுகுறித்து ராக்கி கூறும்போது, ‘‘திருமணம் முடிந்து மூன்று வருடத்துக்குப் பிறகு ரிதேஷ் பிரிந்துவிட்டார். இப்போது என் உடலில் இருந்தும் பிரிந்துவிட்டார். தீவிரமாக காதலித்ததால் அவரது பெயரை பச்சை குத்தினேன். இப்போது அதை அழிக்க கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் யாரும், யார் பெயரையும் பச்சை குத்திக்கொள்ள வேண்டாம்’' என்று ரசிகர்களுக்கு அறிவித்து உள்ளார்.